அந்த நான்குபேர்கள்
ஆடிய ஆட்டம் முடிந்து
அடங்கிப்போன மனிதனுக்கு
இறுதியஞ்சலி செலுத்துவரும்
எண்ணற்ற பேர்களில் ...........
எதிரிகளும்
உறவுகளும்
நண்பர்களும்
கண்ணீர் அஞ்சலிக்காக காத்திருக்க .............
கடமைக்காக வந்தவரும்
கண்கலங்கி நின்றவரும்
மனமுடைந்து போனவரும்
உனக்காக மரணிக்க இருப்பவர்களில் ............
துக்கத்தோடு கலந்துவரும்
நம்மை பற்றிய நாலுவார்த்தை
வாழ்வையே எடைபோடும்
வாழ்ந்த விதம் தீர்ப்புக்குவரும் ............
உள்ளது உள்ளபடி
செய்திருந்த சாதனைகளும்
சந்தித்த சோதனைகளும்
பட்டியலிடும் இறுதிநாள் ...............
உதவிசெய்து வாழ்ந்தவர்களும்
உன்னால் உருக்குலைந்து போனவர்களும்
புகழ்ந்தும் பழித்தும்
வாய் சான்றுகொடுக்கும் நேரமிது ..............
மண்ணில் பிறந்த நேரமுதல்
மண்ணில் மடியும் நேரம்வரை
உன் வாழ்நாள் கணக்குகள்
முடிக்கின்ற இந்நாளில் ............
உண்மையான துன்பம்கொண்டு
உனக்கு அழும் நபர் வேண்டும்
நீ செய்த உதவிகளுக்கு
நன்றி செலுத்தும் நாளாகட்டும் ..............
யுகம் போனபோதும் கூட
உலகம் உன் முகம்தேடி அலையட்டும்
உன் உடல்மக்கி போனபோதும்
நினைவுகள் நிலைத்திருக்கட்டும் .........
நல்லதுசெய்து வாழ்ந்திடுவோம்
பிறர்க்கு நன்றியோடு வாழ்ந்திடுவோம்
நாம் மடியும் நேரத்தில் கூட
பிறருக்கு வாழ்வளிப்போம் ..........
பிறந்து மடியும் பூமியில்
பிறப்பென்பது சாதனை இல்லை
உதவிசெய்து வாழ்கின்ற
வாழ்விற்கு மரணமில்லை ..........
இறுதி தீர்ப்பு வரும் நாளில்
இணையட்டும் நல்லவர்கள்
உன்னை சுமக்கும் நால்வர்களில்
உண்மையானவர்களே இருக்கட்டும் ............
நீவாழ்ந்த வாழ்வதனை
உலகம்பேச வாழ்ந்திடுவாய்
உன் இழப்பு வரும் வேளையில்
உலகையே அழவைப்பாய் ..............
நால்வர் பேசும் வார்த்தையதை
நல்லதாய் பெற்றிடுவாய்
உன் வாழ்க்கைக்கு கௌரவத்தை
நற்செயல்களால் பெற்றிடுவாய் ............