நற்சிந்தனை விதைகள்
''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து ''.- திருக்குறள்
என்கிறார் வள்ளுவர் .
தாழ்வான எண்ணங்களை நீக்கி
உயர்வான எண்ணங்களை விதை !
பழமையான எண்ணங்களைக் கொண்டு
புதுமையான எண்ணங்களை விதை !
பழமையான உணர்வு நூல்களை மாற்றி
புதுமையான உணர்வு நூல்களை விதை !
அன்பான எண்ணங்களைக் கொண்டு
அன்பான உள்ளங்களை விதை !
ஆசையான எண்ணங்களைக் கொண்டு
ஆசையான பண்புள்ளம் விதை !
சிந்தனை எண்ணங்களைக் கொண்டு
சிந்தாத தூய்மை எண்ணங்களை விதை !