யாரைப் போல வாழ
நீ யாரைப் போல வாழவேண்டும்
நம் காந்தி தாத்தா போல!
நீ யாரைப் போல மகிழவேண்டும்
நம் அன்னை தெரசாவைப் போல !
நீ யாரைப் போல எண்ணவேண்டும்
நம் மாமா நேருவைப் போல!
நீ யாரைப் போல வளர வேண்டும்
நம் விஞ்ஞானி அப்துல் கலாமைப் போல!
நீ இவர்களைப் போல ஆக எண்ணினால்...
தன் நம்பிக்கையில் மலர வேண்டும்
சாதனையாளராக இவர்களைப் போல !