டீக்கடை – பேங்குக செய்யிர அட்டகாசங்க… கிரெடிட் கார்டு 2
கஸ்டமர் கேருக்கு போன் பேசிப்புட்டு அப்பாடான்னு இருந்தவரைக்கும் முத்திய தொடர்ல பாத்தோமா… இனி அடுத்ததை பாக்கலாம்.
ஒரு நாளு திடீர்னு ஒரு வக்கீல் நோட்டீசு வரும். அதுல நீங்க பேங்குக்கு கட்ட வேண்டிய பேலன்ஸ் ரூபாய் 3750. அத உடனே கட்டாட்டி ஒங்க பேர்ல கேசு போடுவோம் அப்படீன்னு இருக்கும். அதுலயும் தீர்வு தேடணுமின்னா இந்த நம்பர்ல போன் செய்யுங்க அப்படீன்னு இருக்கும்.
அந்த நம்பர்ல பேசி, “நாந்தான் கிரெடிட் கார்டே வேண்டாமின்னுதானே சொல்லியிருந்தேன். நீங்களே அனுப்பிப்புட்டு இப்ப இப்பிடி ஹராஸ் செய்ஞ்சா என்னங்க அர்த்தம்” அப்படீன்னு கேட்டா அவரு சட்டத்தோட சேத்து லாஜிக் பேசுவாரு. “ஒங்க பேர்ல பேங்குல பேலன்சு இத்தினி ரூபாய் வருது. அவுட் ஸ்டேண்டிங் வர்ர வரைக்கும் இந்த மாதிரி நோட்டீசு வந்திக்கிட்டுதான் இருக்கும். பணத்தை கட்டாத வரை இப்பிடித்தா இருக்கும். அது பேங்கோட ரூல்ஸ் இதுல யாரும் எதுவும் செயமுடியாது” ம்பாரு. அதோட நமக்கே அட்வைசும் செய்வாரு. “வேணாமின்ன நீங்கள் ஏங்க அதை ரிசீவ் செஞ்சீக… திருப்பி அனுப்பியிருக்கலாமில்ல” அப்படீம்பாரு, ரொம்ப நியாயம் பேசிட்ட கணக்கா.
நீங்க பணத்தை கட்டாட்டீ கேசு போடுவாங்க. அப்புறம் கோர்ட்ல போய் அசலு, வட்டி, அபராதம் எல்லாமா சேத்து பத்தாயிரம் கட்ட வேண்டியது இருக்கும்னு ரொம்ப எச்சரிக்கை செய்வாரு.
நாமளும் வேற வழியில்லாம அவிங்க கேக்குர 3750 ரூபாய கட்டிப்புட்டு அந்த ரசீதை பத்திரப்படுத்தி வெச்சிக்கிட்டு இருப்போம். அதை லேமினேட் செஞ்சு வேர வெச்சிருப்போம்.
கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு நோட்டீசு வரும். “நீங்க இதுவரை பணம் கட்டாத்தால ஒங்க மேல கேசு போடப்போறோம். அதுனால இதையே கடைசீ நோட்டீசா நினைச்சு உடனடியா பணத்த கட்டிப்புடுங்க. ஏதாச்சும் பிர்ச்சினையின்னா இந்த நம்பருக்கு போன் செய்யுங்க“ ன்னு எழுதியிருக்கும். அதோட இதுவும் எழுதியிருக்கும். “நீங்க ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதை இந்த நம்பர்ல கஸ்டமர் கேர்ல பேசி தெரியப்படுத்திவிடவும். ஒன்னுமே பிரச்சினையே இருக்காது” அப்படீன்னு இருக்கும்.
இதுக்கு அப்புறம் பிரச்சினை முடிஞ்சிட்டுதுன்னு நினைக்கிறீகளா…. அத அடுத்த தொடர்ல பாப்போம்.
உங்க பாமரன்