மரம் என்னும் உயிர்
மரங்கள்
கோடைக்கு
குடைகள்....
மழைக்கு
விசிறிகள் ...
பூமிக்கு
மரங்கள் ரத்த
சொந்தங்கள் ...
மரங்கள் இல்லாவிட்டால்
பூமி எப்பவோ ...
இறந்து போய் இருக்கும்
மழை இல்லாமல்
மட்டும் அல்ல ...
நிழல் இல்லாத
பூமி
நிஜத்தில் சூரிய கிரகம்தான்....
மரங்கள்
பூமிக்கு வரங்கள்தான்
சாபங்கள் அல்ல
சாபங்கள் இங்கு
மனிதர்களாகி விட்டதால்
மரங்கள் மீண்டும் மீண்டும்
வெட்டபடுகிறது....
கத்தியோடு ரத்தம் இன்றி
தினம் பல கொலைகள்
இந்த பூமியில் நிகழ்வதால்
மரம் மரிக்கிறது
பூமி மீது சிலுவையாக
மழையும் உடன் மரிக்கிறது
வேகமாக ...
நாளை அல்லது நாளை
ஒரு நாள் கண்டிப்பாக
பூமி பாலைவனமாகிவிடும்
அப்போது
மனிதர்கள் பூமியில்
மரங்களை தேடுவார்கள்
கூகுளில் கூட ....
மரம் என்னும் உயிர் இருந்த அடயாளம்
ஒன்று கூட இல்லாமல் இருக்கும்
அப்போது ....
மனிதர்கள்
எந்த மரத்தை வெட்டுவார்கள் ?
என்பதை மட்டும் இப்போதைக்கு
சொல்லமுடியவில்லை .....