போராட்டம்
நீ நிமிர்ந்து நின்றாலும்
நான் குனிந்து போகிறேன் மனமே!
நீ ஓய்ந்து போனாலும்
நான் சாய்ந்து போகிறேன் மனமே !
நீ மறந்து போனாலும்
நான் நினைந்து சாகிறேன் மனமே !
நீ பிரிந்து போனாலும்
நான் புரிந்து போகிறேன் மனமே !
நீ உயர்ந்து போனாலும்
நான் தாழ்ந்து போகிறேன் மனமே !
நீ மறைந்து சென்றாலும்
நான் வாழ்ந்து சாகிறேன் மனமே