டாஸ்மார்க்(மதுக்கடை)

ஊர் ஊராய்
உதயமாகும்
அரசாங்க கல்லறைகள்.!

கஜானாவை
நிரப்பிக்கொள்ள
உயிர் அறுக்கும்
பிணவறைகள்.!

குற்றங்கள் விற்பதற்கு
நீதிவைத்த
தெரு கடைகள்.!

நட்டமென்று
எப்பொழுதும்
முடங்கிவிடா வங்கிகள்.!

நாற்றமென்று
தெரிந்திருந்தும்
நாடேவிற்கும் அங்கிகள்.!

பாமரர்கள்
பணம்தொலைக்கும்
பாழடைந்த குகைகள்.!
////////////////////////////////////////////

எழுதியவர் : பாசகுமார் (25-Jun-13, 2:16 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 86

மேலே