எழுத தெரிந்த கவிதை

வறுமையும் இல்லை
வருத்தமும் இல்லை
சிரிபதற்க்கு ஏனோ
என் மனம் இடம் தரவில்லை

வெற்றியும் இல்லை
வெறுப்பும் இல்லை
முயற்சியில் எதோ
தோல்வியே எல்லை

உறக்கமும் இல்லை
உறங்குவது தொல்லை
நிம்மதி என்பது ஏனோ கிடைப்பதே இல்லை

காதலும் இல்லை
காகிதங்கள் இல்லை
கவிதைகள் எழுத நான்
கவிஞனும் இல்லை என்று
சொல்லி முடித்தேன்
உன்னை பற்றி சொல் [ Tell about yourself ]
என்று கேட்ட அந்த கம்பனி மேனஜரிடம்

எழுதியவர் : மாதவன் கும்பகோணம் (25-Jun-13, 2:28 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
பார்வை : 83

மேலே