ஞாபகம் !

சுளீர் வெயில் மெரினா
போர்த்தி மூடிய தள்ளு வண்டி
கடைகள் !
பகலில் குறட்டை விட்டு
தூங்கும் என் கால் சென்டர்
நண்பனை ஏனோ ஞாபகப்படுத்தும் !

மின் வேலி எல்லையில்
அத்துமீறல், மீன் வலை
கடலில் குட்டி கலகம் தினம் செய்யும்
சப்பாணி நாடுகளிடம் சாந்தமாய்
நடனமாடி
மௌன மொழி பேசும் என் நாட்டு இராஜதந்திரிகளை பார்க்கையில்
மின் கம்பத்தில் கட்டி பெரிய
தாதாவை
அடிக்கும் குட்டித் தாதாவை பார்த்து
சிரிப்பாரே ஒரு சிரிப்பு ( பெரிய தாதா)
அந்த சிரிப்பு ஞாபகம் வந்து எரிச்சலுட்டும் !

ஜல்லிக்கட்டில் முட்டி மோதி, திமிறி,முச்சு திணறி,உடல்வாகு இளைஞர்களை துவம்சம் செய்து வெற்றி மாலை சூடும் காளை மாட்டினை
பார்க்கையில்

கண்ணில் ஏக்கத்தோடு, வெறியோடு
அரை வயிற்று பசியோடும்,அரை வயிற்று கனவோடும்
காலணியும் தேய்ந்து, காலும் தேய்ந்து
பீனிக்ஸ் பறவையாய் விழுந்து, எழுந்து
நகரத்தில் வெற்றியை பறித்த
என் தோழனை ஞாபகப்
படுத்தும் !


கண்ணன்

எழுதியவர் : kannan (25-Jun-13, 11:45 pm)
சேர்த்தது : aristokanna
பார்வை : 72

மேலே