அழியாத காவியமாய்........

அழியாத காவியமாய்
எனது கருப்பு நிறம்
அதனாலேயே
பலரும் திரும்பி...
அலட்சியமாக பார்த்து செல்லும் தோரணை
காலத்தால் எல்லாம் மாறும்

ஆனால் எந்த
அழிப்பானும் கொண்டு
அழிக்க முடியாத
யாரும் விரும்பாத
கருப்பு நிறம்....

நிற்க வைத்து கூறு போடும்
திருமண சந்தையில்
மீண்டும் ஒரு முறை
யாரும் திரும்பி பார்க்க விரும்பாத
எனது கருப்பு நிறம்...

எதுவும் சொல்லத் தெரியவில்லை
இறைவன் எதை நினைத்து
என்னை படைத்தான்
காகத்தை நினைத்து....?
கரும் பொட்டினை நினைத்து.....?
சுடுகாட்டு சாம்பலை நினைத்து.....?

அல்லது
தூங்கிக்கொண்டே இறைவன்
என்னை படைத்தானா????

எழுதியவர் : சாந்தி (25-Jun-13, 11:54 pm)
Tanglish : aliyatha kaviyamai
பார்வை : 167

மேலே