நண்பனின் தங்கைக்கு....(திருமண வாழ்த்து மடல்)
அன்புத் தங்கையே!
இல்லறத்தை துவக்குகின்ற நங்கையே!
வெள்ளை மன மங்கையே!
என் உள்ள மலர் மலர்வதற்கு
நீர் கொடுத்த கங்கையே!
இனியமலர் தோட்டம் பேசும்
தென்றலது உலவும் போது
இலக்கியத்தின் காற்று வீசும்
அறிஞருடன் அளாவும் போது
வெண்மையாக உள்ளம் மாறும்
பனிமலையை காணும் போது
நன்மைசெய்ய எண்ணம் ஊரும்
உந்தனுடன் இருக்கும் போது
அத்தகைய நல்ல உள்ளம்
இத்தரணியிலே
நித்தமும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
எத்தகைய துன்பமென்ன
சத்தமின்றி ஊதிவிடு!
மத்தளத்தின் குணத்தைபோல
இருவருக்கும் ஈடுகொடு!
தினம் உதிக்கும் சூரியனாய்
நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்!
மனம் மகிழும் வாழ்வுபெற்று
என்றும் வாழ வாழ்த்துகிறேன்!
இறைவனது ஆசிபெற்று
உறவினர்கள் அன்பு பெற்று
பதினாறு பேறு பெற்று
தமக்கை நீ வாழியவே!
இந்த அண்ணனது வாழ்த்து கண்டு
மகிழ்ச்சியான எண்ணம் கொண்டு
பாடல்களை பாடிக்கொண்டு
நீங்கள் வாழிய! வாழியவே!