மகா கவியின் மெகா சிரிப்பு.....!!!!
![](https://eluthu.com/images/loading.gif)
கவிஞரே
நீர் சிரித்த போது
நெருப்பு - அது
நெருப் பூ வானது....!!!
கனல் பறக்கும்
கண்களிலே தமிழ்
காதல் மயக்கம் வந்ததுவோ ?!!!
களிப்புற்றேன் - மகா கவியே
களிப்புற்றேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அப்போது கண்களில் கனல் கண்டேன்
கண்ணம்மா என்ற பேர் சொல்கையில்
கவிஞனே கண்களில் காதல் கண்டேன்
களிப்புற்றேன் - மகா கவியே
களிப்புற்றேன்