என் புலம்பல்

இனி ஒரு ஜென்மம் இருந்தால்
உன்னை கனவிலும் காணவேண்டாம்

இந்த சில நாள் பழக்கத்திர்கே
இன்னும் எத்தனை நாள் கண்ணீர் சிந்த போகிறேனோ

உண்மையாய் தானே இருந்தேன்
ஏன் உதறி எறிந்தாய்

இப்போது என்னால் உன்னோடு
பேசாமல் இருக்க முடிகிறது

நீ இல்லாத வாழ்க்கையில்
நான் அனாதை என்று உணர்ந்து இருப்பதால்.

என் இதயம் ஒரு வெள்ளை காகிதம்
எழுதிய உன் பெயரை
அழிப்பதா , இல்லை கிழிப்பதா என்ற
குழப்பத்தில் நான்

என் பேச்சுக்கள் உனக்கு புலம்பலாய் தெரியும்
புலம்ப விட்டவள் நீ என்று உணராதிருப்பதால்

எழுதியவர் : மா பிரவீன் (27-Jun-13, 1:15 am)
சேர்த்தது : மா பிரவீன்
Tanglish : en pulambal
பார்வை : 78

மேலே