புரவி தேடும் புண்ணியம்

ஆற்று வெள்ளத்தில் அவரவர் அடித்துச்செல்ல

அடுத்தவரைப் பற்றி நினைப்பதே அபூர்வம் !

தானே மூழ்கும் நிலையில் இருந்தாலும்

தன்னைப் பற்றிய ஒருஜீவனை நினைக்கிறது !

அசைந்து செல்லும் இப்புரவி இதயத்தில்

ஆற்று நீரைவிட அன்புவெள்ளம் ஓடுகிறது !

புனிதர் வேடமிட்டு புவியில் சுற்றிவரும்

மனிதரை காட்டிலும் இப்புரவி மேலானதே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Jun-13, 7:48 am)
பார்வை : 99

மேலே