அங்கு நீ எப்படி.....இங்கு நான் இப்படி....!!!!!

இந்த வானத்தின்
மழைப்பந்தலின் ஊடே
எனது விரல்களுடன் நீ......

சிதறி அடித்த சாரல்துளிகளும்
உதறிவிடாத உன் நினைவுகளாய் ...
என் விரல் நரம்புகளூடாக.....

எங்கோ பயணித்தப் பொழுதுகள்
பத்தாயப் பொதிகளாய் இன்றும்.....

அன்று பெய்த மழைப் போல
இன்றும்
அதே வானத்தின் கீழாக
தரை மேல் படர இயலா பாதங்களின்
அழுத்தத்தில் உனது பிம்பங்கள்...-
தள்ளாட்டம் அது என அன்று சொன்னாய்
அதன் ஆட்டத்திற்கும் வாலிபம் என பெயரிட்டாய்...

இன்றும் இங்கு தள்ளாடுகிறேன்
அருகில் இருந்தால் என்ன சொல்லுவாய்...??

"பின்னி வலைப்பின்னலிடும்
வயோதிக ஆட்டம் "-என்றா ?
அன்றியும் ,
நான் இன்னமும் மறக்கவில்லை
வானத்தையும் மழையையும்
உனது மீசை முடிகளை
தன்னுள்ளே புதைத்துக் கொண்ட
தாடிக்கற்றைகளையும் .
கூட .....!!!


அங்குள்ள முதியோர் இல்லத்தில் நீ எப்படி...??

எழுதியவர் : வீரன் தாமரை (27-Jun-13, 2:37 pm)
பார்வை : 119

மேலே