வாழ்க்கை வயல்

வாழ்க்கை வயல்
விசித்திரமானது.

ஆசைகளால் உழுது
கவலைகளை விதைத்து
ஏக்க நீர்பாய்ச்சி
எதிர்பார்ப்பு மருந்தடித்து
அவசர அறுப்புச் செய்யின்
துயரங்களும் வலிகளுமே
அறுவடையாய் தருகிறது.

மாறாக,
நல்முயற்சிகளால் உழுது
கடமைகளை விதைத்து
பொறுப்புடன் நீர்பாய்ச்சி
ஆசைகளைக் களையெடுத்து
நம்பிக்கை மருந்தடித்து
நேர்மை காவல் செய்து
நயமுடன் காத்திருந்தால்
மனநிறைவும் மகிழ்வுமென
அமோக விளைச்சல் தரும்.

சரியாய்ப் பயிர்த்தொழிலை
புரிந்திடுவோமாயின்
வாழ்க்கை வயலை
வசைபாட வேண்டியதில்லை.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (29-Jun-13, 1:47 pm)
பார்வை : 82

மேலே