என் உயிர் எழுத்து தளமே , என் எழுத்து தோழர்களே உங்களுக்கு ஓர் அழைப்பு

எழுத்து தள நிர்வாகிகளே , எழுத்துலக நண்பர்களே ,
மதிப்பிற்குரிய கவிஞர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் . உங்கள் நல்லாசியோடும் எழுத்து தளத்தின் பேராதரவோடும் நான் எழுதிய கவிதைகளை தொகுத்து " அர்த்தமுள்ள கிறுக்கல்கள் " என்கிற தலைப்பில் கவிதை நூல் வெளியீடு விழா புதுவையில் ஞாயிறு மாலை 5.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற இருக்கிறது . தனித்தனியாக அழைக்க நேரமில்லாத காரணத்தால் இந்த அழைப்பின் மூலம் உங்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு அழைக்கிறேன் . இந்த அழைப்பை தாங்கள் நேரில் அழைத்ததாக கருதி விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன் .

மேலும் இவ்விழாவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு . பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை வகிக்க , நலம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு . ராஜவேலு அவர்கள் முன்னிலை வகிக்க , கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .தியாகராஜன் அவர்கள் நூலை வெளியிடுகிறார் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . மேலும் இலக்கிய வட்டத்தை சேர்ந்த மற்றும் தமிழ் பற்றுகொண்ட ஆன்றோர்களும் சான்றோர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அன்போடும் பணிவோடும் அழைக்கிறேன் .

என்னை இந்த அளவிற்கு உயர்த்தி எனக்கு நல்ல வாய்ப்பளித்த இந்த எழுத்து தளத்திற்கும் என் நன்றியை உறித்தாக்குகிறேன் . நான் எழுதிய கவிதைகள் அனைத்திற்கும் நல்ல மதிப்பெண் கொடுத்து தெம்புகொடுக்கும் வகையில் கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் மிக்க நன்றி .

எழுதியவர் : வினாயகமுருகன் (29-Jun-13, 3:49 pm)
பார்வை : 453

மேலே