@@@ தன்னம்பிக்கைத் துளிர் @@@
சிறுதுளியாய் முடியாதென்று
==நினைத்து சோர்ந்திருந்தால்
கடின உழைப்பால் அதுவும்
==அழகாய் கட்டிட முடியாது கூடு
சின்னஞ்சிறு தேனிக்கிருக்க
==கடின உழைப்போடு நடைபோடு
ஆரம்பித்த கணமே அழகாவதில்லை
==ஆயிரம் முறை முயன்றால் தான்
அழகிய இருப்பிடம் உருவாக்கிடும்
==சிலந்தியும் மரங்கொத்தியும்
தன்னுடைய விடாமுயற்சியில் -நீயும்
==கையிலெடு விடாமல் உன் முயற்சியை
எண்திசை இருந்தாலும்
== தன் திசை நோக்கி
குறிக்கோள் அடைந்திடும்
==சேணம் பூட்டிய குதிரையாய்
நடைபோடு நாளைய
== உலகம் என்றும் உன்னோடு
உயிராய் உருவாகும் கருவை
==சுமக்க பெண்கள் மறுத்தால்
உலகில் ஏது மனிதர்கள்
==ஏன் எங்கிருப்போம் நீயும் நானும்
வலி பொறுக்க தெரிந்தவர்கள்
== மிளிர்கிறார்கள் வருங்காலத்தில்
சாமர்த்தியமும் திறமையும்
==உன்னுள் கொண்டு உருவெடு
தீட்சமாக திடமனதோடு
== த -தன்னம்பிக்கை ,கு -குறிக்கோள்
தி -திறமை கொண்டு நீ தரமாகு
==தகுதி உனக்கென உருவாகும்
உன்னுடைய உள் எண்ணங்களை
== ஒருநிலைப்படுத்து
உன் ஒட்டுமொத்த உன்னத
==உணர்வுகளை வடிவமாக்கு
தன்னம்பிக்கைக்கு
==உன்னுடைய உயிர் கொடு
விடாமுயற்சி என்னும் உளிகொண்டு ==அலட்சியத்தையும்
சோர்வையும் இயலாமையையும்
===கடின உழைப்பால் செதிக்கிடு
வந்து நிற்கும் வாழ்வு
==சாதனையாளன் நீ என்று
...கவியாழினிசரண்யா..