காதலே வேணாமுங்க
நெஞ்சில் எத்தனை காயம்
கனவாய் போகுது காலம்
காலம் கடந்தது இந்த ஞானம்
கண் கெட்டபின்
எதற்கு சூரிய நமஸ்காரம்
கண்ணுக்குள் முள்ளாக தைக்குது
உந்தன் சோகம்
கண்ணே
திருப்பிக்கொடுத்து விடு
கரைந்து போன எந்தன் நேரம்
காரிருள் மேகம்
எப்போதாவது கரைந்தே போகும்
காதல் மோகம் என்றாவது
குறைந்தே தீரும்
உந்தன் பின் தினமும் திரிய நானும்
என்ன கடனா கேட்கிறேன்
என்னை விட்டுவிடு போதும்
உலகம் தரும் எனக்கு மேலும்
உன்னை விட புது மலர் ஒன்றேனும் ......////