மது மயக்கம்!
இது கவிதை மட்டும் தான்
இதை புரிந்து கொள்ளு!
இது புரியா விட்டால்
உன் வழியில் செல்லு!
மது தேடும் வண்டு மயக்கத்தில்
அதன் போதை ஏறி உறக்கத்தில்
உறக்கம் தெளிந்தால் சொர்க்கத்தில்
எவனோ கொன்று போட்டான் பதட்டத்தில்
மனமும் மதுவும் ஒன்றாகும்!
அதுவும் சிலநாள் வண்டாகும்!
மயங்கி அதுவும் அலைபாயும்!
மயக்கம் தெளிய நாளாகும்!
எவனோ ஒருவன் கொல்லும் முன்னே
மயக்கம் தெளிந்தால் நன்றாகும்!
மரணம் தயங்கி வாழ விடும்!
வாழ்வில் இன்னிசை தேடிவரும்!