உனக்கும் ஒரு மரணக் குழி

பெண்ணவள் பூ அவள்
மனதாலே தொட்டு பார்
உன் மடியில் மண் புழுவாய்
மயங்கிடுவாள்
அன்பாலே அடித்துப் பார்
உன் கண்ணில் நீர் கசிந்தால்
துடித்து போவாள்

இச்சைக்கு வேண்டி
பெண்ணை நீ கொச்சை படுத்தினால்
மிச்சமுள்ளது ஏதடா
இது கேட்டால்
காக்கையும் உன்மேல்
எச்சம் துப்பும் பாரடா

அன்பிருந்தால் மட்டுமே
புணருது தெரு நாயக்
கொஞ்சம் பாரடா
அந்த நாயை விட நீ
கேவலமா உன்னையே
ஒரு கேள்வி கேளடா

நமக்கு ஜனனம் கிடைத்தது
ஒரு பெண் வழி
நீ தாயாய் காண்பது
ஒரு பெண் விழி
இதை நீ மறந்தால்
காத்திருக்கும் விரைவில்
உனக்கும் ஒரு மரணக்குழி.

எழுதியவர் : சங்கை முத்து (7-Jul-13, 10:42 am)
பார்வை : 101

மேலே