சா - தீ...!

கொள்ளிக்கட்டையில் நெருப்பு
நீறு பூத்த நெருப்பு !!
யார் வைத்தது ?
நீயா ?
அல்லது .....
உன் பெயர் கொண்ட
முகமூடியா?
குடிசையில் வைத்ததும்
கூரை போச்சு ....
குலமகள் வீட்டிலோ
குங்குமம் போச்சு ....
பச்சை பிள்ளைக்கோ
பால் மனம் போச்சு ..
மாட்டு மனிதனுக்கோ
தீவனம் ஆச்சு!
எஞ்சி இருப்பது
ஆகாசம் பூமி
அதிலும் நெருப்பு வைத்தால்
உனக்கொன்றும் இல்லை சாமி !

ye

எழுதியவர் : (9-Jul-13, 7:23 pm)
பார்வை : 61

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே