ர, ற - வேறுபாடுகள்

"ர, ற" வேறுபாடுகள் .................................

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்

அரை - மாவாக்கு
அறை - வீட்டுப்பகுதி

ஆர - நிறைய
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

உரை - சொல்
உறை - அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்

கரை - கடற்கரை
கறை - மாசு

கோருதல் - விரும்புதல்
கோறல் - கொல்லுதல்

சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை

சொரிதல்- பொழிதல்
சொறிதல்- நகத்தால் தேய்த்தல்

பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட

பரவை - கடல்
பறவை - பட்சி

பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை

பெரு - பெரிய
பெறு - அடை

பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பெரும்பாலானோர்க்கு இந்த வேறுபாடுகள் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குப் பயனளித்தால் நல்லது தானே!

எழுதியவர் : மா.காளியண்ணன் (10-Jul-13, 7:44 pm)
சேர்த்தது : KALIANNAN.M
பார்வை : 1234

மேலே