எங்கே ஏரிகள்?

சேரிகள் காணாமல் போனால்
சேர்ந்து போற்றலாம் சமத்துவத்தை!
ஏரிகள் காணாமல் போனால்
எங்கே சென்று முறையிடுவது?

மாரியை நம்பி மண்ணையுழுதது
ஒரு கூட்டம்!
ஏரியை நம்பி ஏரோட்டியது
மற்றொரு கூட்டம்!

இன்று ஏரியும் இல்லை
மாரியும் இல்லை!
ஏனென்று கேட்க நாதியுமில்லை!

வீழும் மழையைத் தாங்கி
நிற்கவேண்டிய ஏரிகள்,
இன்று வீட்டு மனைகளைத்
தாங்கியபடி!

விரைந்து செயல்பட வேண்டிய
அரசாங்கமோ இங்கு
விழித்திருந்தும் தூங்கியபடி!

ஏரிக்காகத் தன்னை வெட்டும்போது
ஏனென்று கேட்காத பூமி - இன்றதில்
கழிவுகளைக் கொட்டும்போது
கண்ணீர் விட்டு அழுகிறது!

ஏரிகளை மீட்டெடுப்போம்!
எதிர்ப்பவரைத் தோற்கடிப்போம்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (15-Jul-13, 11:39 am)
பார்வை : 107

மேலே