!!!===(((ஒருத்தாயின் முகாரி))===!!!
ஒருத்தாயின் முகாரி
*******************************
2004 ஜூலை 16 தமிழகத்தையே உலுக்கிப்போட்டு ஆழ்ந்த துக்கத்தில் நம்மைத் தள்ளிய சம்பவம், கும்பகோணம் தீவிபத்து, பால்குடி மாறாத பச்ச பச்சிளம் பூக்கள் 94 குழந்தைகள் தீயில் கருகிய அந்த கோரச்சம்பவம் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவே இல்லை.
குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்னும் கண்ணீர் சிந்திகொண்டுதான் இருக்கிறார்கள்,
94 பெற்றோர்கள் மீளாத்துயரத்தில் இருக்கிறார்கள், ஒவ்வொரு ஆண்டின் ஜூலை 16 றும் மரண நாளாகவே நினைக்க தோன்றுகிறது, அந்த கோரத்தீயில் பல பெற்றோர்களும் தன் பிள்ளையை பறிகொடுத்து இருக்கிறார்கள்.
ஒறுத்தாய் தன் ஒற்றைப் பெண் குழந்தையை இழந்துவிட்டு கதறுவதாகவே கீழே வரும் பாடலை எழுதி இருக்கிறேன், இப்படி பலர் தங்கள் ஒற்றைப்பிள்ளையை பறிகொடுத்து இருக்கிறார்கள், அந்த பெற்றோர்களுக்கெல்லாம் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அந்த 94 காவிய பூக்களுக்கும் இந்த முகாரி ராகத்தை எனது ஒப்பாரிக்கதறலாக சமர்ப்பிக்கிறேன்.
நாளை ஜூலை 16 மரண நாள், ஆகுதியான அந்த 94 ஆத்மாக்களுக்கும் உங்கள் 9 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
=======பல்லவி======
பொட்டுவச்சி பூமுடிச்சி போனாளே
பள்ளிக்கூடம் போனாளே - அவ
திரும்பவில்ல தீக்கிரையா ஆனாளே
அம்மம்மா ஆனாளே...
ஒத்தப்புள்ள என்னவிட்டுப் போனாளே
ஒத்தையாப் போனாளே - நான்
தவமிருந்து பெத்தபுள்ள ஆனாளே
சாம்பலா ஆனாளே...
தொன்நூத்தி நாளுல
என்னுது ஒன்னுங்க
அந்த ஒன்னுதான்
எனக்கு உசுருங்க...
குழு;- பொட்டுவச்சி பூமுடிச்சி போனாளே
- - - - பள்ளிக்கூடம் போனாளே - அவ
- - - - -திரும்பவில்ல தீக்கிரையா ஆனாளே
- - - - -அம்மம்மா ஆனாளே...
=========சரணம் 1========
அம்மான்னு சொல்லி சொல்லி
அன்ப பொழிந்த மக
அக்கினிக்குத் தீனியா ஆகிதத்தான் போனாளே...
குறும்பு தனத்த செஞ்சி
குதூகலம் தந்த மக
கும்பகோணம் தீயிலே தீயாகிப்போனாளே...
தாய்மையின் கர்வத்தை
- - - உடச்சிட்டானே கடவுளு
தாலியை சுமந்ததுக்கு
- - - தண்டனையா இது இது ...?
தனிமையில் வாடுறேன்
தனிப் பிணமாகுறேன்
கருவறை சொந்தத்த
கல்லறையில் தேடுறேன்...
குழு;- பொட்டுவச்சி பூமுடிச்சி போனாளே
- - - - பள்ளிக்கூடம் போனாளே - அவ
- - - - -திரும்பவில்ல தீக்கிரையா ஆனாளே
- - - - -அம்மம்மா ஆனாளே...
========சரணம் 2========
கொஞ்சி கொஞ்சி பேசிப்பேசி
துள்ளிவிளையாண்ட மக
அனாதையாயென்னை விட்டுத்தான் போனாளே...
நெஞ்சினிலே நித்தம் நித்தம்
உறங்கி எழுந்த மக
யாரிடமும்சொல்லாம எமலோகம் போனாளே...
மலடியா இருந்திருந்தா
- - - மனசதேத்தி இருக்கலாம்
தாய்மையை பாதியிலே
- - - இழந்துயிருக்க முடியுமா...?
கத்தி கதருறேன்
கண்ணீர் சிந்துறேன்
கர்ப்ப அறையில
சோகத்த சுமக்குறேன்...
குழு;- பொட்டுவச்சி பூமுடிச்சி போனாளே
- - - - -பள்ளிக்கூடம் போனாளே - அவ
- - - - -திரும்பவில்ல தீக்கிரையா ஆனாளே
- - - - -அம்மம்மா ஆனாளே...
கண்ணீர் காணிக்கையுடன்
நிலாசூரியன்.