தமிழ் மொழி

என்னை எழுதச் சொல்லி
இறைவன் தந்த
வரமே..

பேசப் பேச இனித்திடும்
நல்ல கனியே..

மது மாது என்று
போதைக்கு இலக்கணம்
தந்த பொக்கிசமே..

இரண்டுக்குமிடையே
ஒரு எழுத்தை அதிகமாய்
வைத்து இது கூடினால்
மாறிடும் உன் தலையெழுத்தென்று
சொல்லாமல் சொல்லிய
என்னறிவுச் சுடரே..

உருட்டிவிட்ட பாறாங்
கல் போல நீயும்
கால் போன போக்கிலே
போனால் கடைசியில்
மிஞ்சுவது ஒன்றுமில்லையென்று
கண்ணிருந்தும் குருடரவர்
வழி மாற்ற உதவும்
நீயுமொரு உளியே..

மண் கலமாய்ப் பிறந்த
தமிழர் குலத்தை
இன்று வின்னுலகமே
போற்றச் செய்ததுந்தன்
கலையே..

உனைப்போல ஒரு மொழியும்
இந்த உலகில்
பிறக்கப் போவதில்லை
இனியே..

எழுதியவர் : சங்கை முத்து (15-Jul-13, 1:11 pm)
சேர்த்தது : Sangai Muthu
Tanglish : thamizh mozhi
பார்வை : 72

மேலே