மனித நேயம்
மனித நேயம்
புத்தகத்தின் மத்தியில்
புதைந்த கதைகளை
புரட்டி பார்க்கயில் ஒட்டிய உருவில்
செத்து போன எறும்பை கண்டு
எப்படி இந்த துயரம்
என்று இதயம் நோகும்....
ஒற்றை மயில் தோகை
வருடும் போது
வருடிய தோகைக்கு வலித்ததோ
என்று உதடுகள் நோகும் ...
கடலுக்குள் கட்டியாண்ட
கடல் வண்டுகள் கரைவந்து
ஒதுங்கும் போது
அலையே வந்து அடித்து போ
என மனம் வேண்டும் ...
கை தவறி வீழந்த
கண்ணாடி குடுவை மத்தியில்
துடித்த மீன்களின் கதரல்கள்
சத்தமில்லாமல் காதை வருடும்...
காரணம்
இவைகளுக்கு வலிக்குது என்று
சொல்ல கூட வாய் இல்லையே
என மனிதனின் மனம் ஏங்கும்....
மற்றதில் உள்ள மனித நேயம்
மனிதனுள் இல்லை
இன்றும்.....
காரணம் தெரியாமல் கல்லறையில்....
கருகிய உடல்கள் மீண்டும் கருவறை உருமாற...
கதறி அழுகிறது இன்னும் ஒரு மனித பிறவியா?
வேண்டாம்...
பட்டாம்பூச்சியாய் படைத்துவிடுங்கள்
பட்டுநூலாய்யானால் கூட
பத்திரமாய் வைத்து கொள்வர் என
இறந்த பின்னும் இறைவனுக்கு வாக்குமுலம் தருகின்றன ......
-அமுதநிலா