என் கிறுக்கி - 1

வெயில் மண்டையை பிய்க்கும் மதிய வேலை அது.. பள்ளியில் சனிக்கிழமை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு "கிறுக்கன்" தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டே செல்கிறான்...

இனி கிறுக்கனைப் பற்றி...

கிறுக்கன் வெளியூரில் இருந்து வந்து இந்த பள்ளியில் படிக்கிறான் காரணம் அவ்வளவு சிறந்த பள்ளி என்று அவனை அங்கு சேர்த்திருந்தார்கள்... வரமாட்டேன் என்று அடம் பிடித்தவனை வல்லுகட்டாயமாக சேர்த்து விட்டு சென்றார்கள் ஒருவருடம் கழிந்து இது இரண்டாம் வருடத்தின் தொடக்கம், அது தான் பத்தாம் வகுப்பு ... வாரா வாரம் சனி ஞாயிறு என்றில்லாமல் ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லப்படும் சிறப்பு வகுப்பிற்கு தான் வந்துவிட்டு செல்கிறான்.. முதல் ஒன்றிரண்டு வாரங்கள் கடுப்பில் வந்து போன கிறுக்கன் குஷியாக வரத் தொடங்கினான்.. காரணம் புரியாமல் விழி பிதுங்கி அவனது நண்பர்கள்... காரணத்தை கேட்கவும் தவறவில்லை ... இரண்டொரு நாட்கள் கழித்து அவனாகவே நண்பர்களிடம் ஏதேதோ பேசத் தொடங்கினான் ... அப்பொழுது புரிந்து கொண்ட நண்பர்கள் யாரென்று ஏதும் கேட்காமல் அவனை கூர்ந்து கவனித்து அவர்களாகவே தெரிந்து கொண்டனர்...

அன்று முதல் கிறுக்கன் பள்ளி முடிந்து பேருந்து நிறுத்தம் தான் செல்வான் ஆனால் நேர் வழியில் இல்லை... அவன் நண்பர்களும் பல்லைக் கடித்துக்கொண்டு அவன் வாங்கித் தரும் பஜ்ஜிக்காக அவனுடன் வருவார்கள்... அந்த சமயம் 7ஜி ரெயின்போ காலனி படம் வெளியாகி இருந்த சமயம்... கிறுக்கன் அதிலுள்ள சில அழகான பாடல் வரிகளை சிலோகித்த வண்ணம் வந்துகொண்டிருக்கும் போதே நண்பர்களெல்லாம் அவரவர் வீடுகளுக்கு திரும்ப பாடலை பாடிக்கொண்டே கிறுக்கன் வந்தான் திடீரென்று தேய்ந்த ரெகார்ட் போல சத்தம் குறைந்து நின்று போனது...

என்ன டா நீ இன்னும் வீட்டுக்கு போகாம இங்க இருக்குற ..?

குரலில் இனிமை... மனதில் பயம் கலந்த இனிமை...

"எதிரில் கிறுக்கி"

இன்னும் கிறுக்காக்குவாள் .....

எழுதியவர் : G .Udhay .. (20-Jul-13, 11:40 pm)
பார்வை : 112

மேலே