எழுத்து.காம்..க்கு வாராய்!...
நினைவில் சந்தனம் மணக்க,
சிந்தையில் விந்தை துளிர்க்க,
மூளைக்குள் மின்சாரம் முளைக்க,
நீண்ட ஆகாயம் அதை தொட,
நிலவை பூமியில் நீ நட,
எழுத்து.காம்...கு வாராய்!
எக்ஸ்பிரஸ் ட்ரெயினாய் வாராய்!
புதுமைகள் பல புகுத்திட,
புதிதாய் புகழைக் குவித்தட,
புயலென எழுத்துக்கு வாராய்!
புது யுகம் படைத்திட வாராய்!
எழுத்தை அறிந்தால் பெண்ணே!
உன் திறமையை உணர்வாய் பொன்னே!
வெற்றிக்கனி அருகிலே கண்ணே!
நிகழ்கால நெல்மணிகளே!
வாருங்கள் வடம் பிடிக்க,
தமிழுலகில் தடம் பதிக்க,
எழுத்துலகில்இடம் பிடிக்க,
மண்ணில் புதைந்த வைரமே!-உன்னை
பட்டை தீட்ட எழுத்துக்கு வாராய்!
வெளிச்சம் காணா விதையே எழுத்தொளி பெற்றிட துள்ளி வாராய்!
இந்த நித்லு அழைக்கிறேன் வாராய்!
-நித்லு