மழை......கடவுள்....
கடலினில் பிறந்தும் இனிக்கிறாய்....
எந்தக் குளத்திலும் கலக்கிறாய்....
கருப்பு குடைகள் காட்டிய போதும்....
கருத்தாய் கண்ணில் நிறைகிறாய்...
ஆண்பெண் பேதங்களின்றி....
ஆரத் தழுவிக் கொள்கிறாய்....
நிறமின்றி நீ இருந்து.....
எந்நிறமும் ஏற்கிறாய்....
கடவுளின் குணங்கள் என்னென்னவென....
மனம் கேட்க....
நெற்றியில் சன்னமாய் முத்தமிட்டது.....
ஒரு துளிக் கடவுள்......