மின்வெட்டின் நன்மை..
ஆனந்தனை 'அட்டம்ட் ஆனந்தன் ' என்றே எல்லோரும் அழைப்பார்கள்
+2 பரீட்சையை ஏழு ஆண்டுகளாக சந்தித்து வந்தவன்.
அப்பேர்பட்ட ஆனந்தன் இந்தமுறை பாஸ் ஆகிவிட்டான் என்ற செய்தியை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"எப்படி ஆனந்தா ,இத்தனை வருஷம் முடியாம இந்த முறை மட்டும் எப்படி பாஸ் பண்ண? பிட் அடிச்சியா?பேப்பர் சேசிங்கா?"அம்மாவே கேட்டாள்.
"அதுவா? நான் பாஸ் பண்ணதுக்கு காரணம் மின்வெட்டுதான். கரண்ட் இருந்திருந்தா ,வீட்ல ஆள் ஆளுக்கு டி.வி பார்த்திட்டு என்னை படிக்கவிடாம தொந்தரவு பண்ணி இருப்பீங்க.... உங்ஙளோட சேர்ந்து நானும் படிக்காம சீரியலும் ,கிரிக்கெட்டும் பார்த்துட்டு இருப்பேன்.இந்த முறை கரண்ட் இல்லுததால படிச்சு பாஸ் பண்ணிட்டேன்" என்றான் ஆனந்தன்.