நட்பு

காதல்
சுயநலம்
கொண்டது ,

நட்பு
பொதுநலம்
கொண்டது ....

சாகடிப்பது
காதல் .....

வாழவைப்பது
நட்பு....

தேடி
கிடைப்பது
காதல்.....

தேடாமல்
கிடைப்பது
நட்பு......

கண்ணீரை
சிந்த
வைப்பது
காதல்.....

சிந்தும்
கண்ணீரை
துடைத்து
விடுவது
நட்பு....

சண்டையில்
தொடங்கி
கோபத்தில்
முடியும்
காதல்.....

சந்திப்பில்
தொடங்கி
உண்மையான
அன்பால்
தொடரும்
நட்பு....

நரகத்துக்கு
வழி காட்டும்
காதல்.....

சொர்க்கத்துக்கு
வழி காட்டும்
நட்பு......

நட்பை
வெறுக்கும்
காதல்......

காதலை
வாழவைக்கும்
நட்பு.....

பணத்துக்காக
வரும்
காதல்.........

அன்புக்காக
மட்டும்
வரும்
நட்பு......

எதிர்
பார்ப்புடன்
வாழும்
காதல்.....

எதிர்
பார்க்காமல்
வாழவைக்கும்
நட்பு......

நட்பை
நேசிப்போம்
நட்பை
சுவாசிப்போம்
நட்போடு
வாழ்வோம்.

எழுதியவர் : வே.அ (25-Jul-13, 1:32 pm)
Tanglish : natpu
பார்வை : 100

மேலே