பரூக் அப்துல்லா - ரஷீத் மசூத் - ராஜ்பப்பர் இரட்டை மீனிங்கில் பேசுகிறார்களா..?

ரஷித் மசூத் இவ்வாறு கூறினார், டில்லி ஜும்மா மசூதி அருகே 5 ரூபாய்க்கு வயிறு நிறைய மதிய உணவு கிடைக்கிறது என்றார்.

ராஜ்பாப்பர் இவ்வாறு கூறினார். மும்பையில் 12 ரூபாய்க்கு முழு சாப்பாடு கிடைக்கும். ஆனால் 12 ரூபாய்க்கு வட பாவ் கிடைக்காது. முழுச் சாப்பாடு 12 ரூபாய்க்கு மும்பையில் கிடைப்பதை எதிர்க்கட்சிகள் அறிய மாட்டார்கள் என்றார்.

ரூ 1 - க்கு வயிறார சாப்பிட முடியும் என்றார் பரூக் அப்துல்லா அவர்கள்...

சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் அமைந்த திட்டக்குழு சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில் கிராமங்களில் ஒரு நாளைக்கு 27.20 க்கும் நகர்ரங்களில் நகரங்களில் ரர் 33.33 க்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளாக கருத மாட்டார்கள் என்று அறிக்கை கொடுத்துள்ளார்கள்...அந்த அறிக்கையின் மீதான எதிர்க் கட்சிகளின் மறுப்புக்கு தான் இவ்வாறு சப்போர்ட் பண்ணி பேசியிருக்கிறார்கள் மேற்கண்ட மூன்று பேரும்...!

இப்பேர்ப்பட்டவர்கள் தான் அமைச்சர்களாகவும்...எம்.பி.க்களாகவும் பாராளுமன்றத்தில் விவாதித்து பேசி...இந்திய மக்களுக்கு ஆட்சி செய்யப் போகிறார்கள்...
இவர்களைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம்...
நிர்வாகம்..ராணுவம்... போலீஸ்...!

இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் எந்த மீனிங்கில் பேசுகிறார்கள் என்று..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (27-Jul-13, 4:32 pm)
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே