எனக்கும்...அவனுக்கும்...அர்த்தங்கள் வேறு வேறாய்...
நோயாகி இருக்கிறேன்....
தாயாகி இருக்கிறது
உன் காதல்.
*************************************************************
அணில் முற்றத்தில்....
பழம் கொறிக்கிறது அணில்...
அதன் கண்களில்
கேலியாய்த் தெரிகிறது
நேற்றைய உன் சீண்டல்.
**************************************************************
கடவுளோடு பேசிக் கொண்டிருக்கிறாய்...
என் வரமே....
தவங்கள் எதற்காக?
**************************************************************
நீ இல்லாத நாட்களில்...
வீடெங்கும் முளைத்து நிற்கிறது
உன் மொழி.
நானும் பேசிக் கொண்டே இருக்கிறேன்....
யாருக்கும் கேட்காமல்.
****************************************************************
பறவையின் சுதந்திரத்தோடு...
நீ திரிவதாய் எழுதுகிறேன்....
என் கவிதைகளில்.
உன் பிள்ளையோ...
கூண்டுக் கிளியாய் நீ அழுவதாய்
எழுதுகிறான் அவன் கவிதைகளில்...
தலைமுறைக்குத் தலைமுறை...
காதலின் அர்த்தமும்...
வேறாகி விடுகிறதா?...
என் பிரியமானவளே..