சட்டம் தந்த வள்ளுவரே வாழி !!

உலகநிலை முழுவதுமே உணர்ந்தே ஈங்கு
உத்தமராய் வாழவழி முறைகள் கண்டார்
இழிசெயலைப் புரிகின்ற தீயோர் கூட
இறக்கத்துடன் உயிர்களிடம் அன்பு காட்டி
ஒழுக்கத்துடன் நீதிவழு வாமல் என்றும்
உள்ளத்தில் சினமறுத்து வாழ வேண்டி
வழிமுறையை வாழ்வியலின் சட்டம் என்றே
வகுத்தளித்த வள்ளுவர் வாழி ! வாழி !


************எழில்***********
28-07-13

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (29-Jul-13, 12:07 am)
பார்வை : 58

மேலே