இந்தக்கவிஞர்களை என்ன செய்ய !!???

அறம் பொருள் பற்றி பாடாமல்
அழகியரின் நிறம் பற்றி மட்டும்
பாடுகின்ற
இந்தக் கவிஞர்களை என்ன செய்ய ??

மனித நேயக் கருத்துகளைக்
கவிதையில் பாடாமல்
அரையாடை உடுத்துகிற
துடியிடையாளின் அசைவுகளை
மட்டும் பாடுகிற இந்தக் கவிஞர்களை என்ன செய்ய???

சந்தக் கவிதையிலே சமுதாயம் முன்னேறப்
பாடாமல் மோகச் சத்தங்களை முனுமுனுக்கும்
இந்தக் கவிஞர்களை என்ன செய்ய ???

***********எழில் ***********
28-07-13

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (29-Jul-13, 12:22 am)
பார்வை : 125

மேலே