பொடியனுக்கு !

கற்றுத் தேர்ந்திடு
காசு சேர்த்திடு !

பெற்றோர் மனம்குளிர
பெருமைகளை சேர்த்திடு !

சுற்றுச் சூழலைச்
சுத்தமாய் வைத்திடு !

வீட்டுகொரு மரக்கன்று
விரைவாய் நட்டிடு !

மேலோர் கீழோர்
எண்ணம் நீக்கிடு
நூலோர் உரைத்த
பாதையில் நடந்திடு !

நாளும் கடமையே
உயிராய்ப் பேணிடு
ஞாலம் போற்றிடும்
அறிஞனாய் உயர்ந்திடு!!

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (29-Jul-13, 12:38 am)
பார்வை : 68

மேலே