எமனின் பார்வை யார்மேல்..?
இந்த உலகில்
பூக்களோ பூக்க மறப்பதில்லை
நட்ட மரமோ
காய்க்க தவறியதில்லை
மழையோ பெய்திடவும்
மறுப்பதில்லை
ஆனால்..
இவர்கள் பட்டினி மட்டும்
இன்னும் மாறவில்லை
கட்டிடங்கள் வானைத்
தொடுகிறது
காசு கோடி கணக்கில்
வந்து குமிகிறது
பணமெல்லாம்
விளக்கில்லா சிறைக்குள்ளே
கள்ள நோட்டாய் நாட்களை
கழிக்கிறது
இந்த பிள்ளைகளோ இங்கே
பட்டினிக்கு பலியாடாய்
தினம் தொட்டிலிலே சாகிறது
தண்ணீரே இவர்களுக்கு
உயிர் தரும் ஆகாரம்
காட்சியில் தெரியும் சிறுவனின்
எலும்புகளே இதற்கு ஆதாரம்
இப்போ எமனின் பார்வையெல்லாம்
இவர்களின் மேல்
இதயமுள்ளவரே ஒரு
முறை சிந்திப்பீர்
இல்லாதோர்க்கு உதவி செய்து
அவர்கள் வாழ்வில் ஒளியேற்றினால்..!
இறைவனே இறங்கி வந்து
நம் வீட்டில் விளக்கேற்றுவான்.