புறப்படு தமிழா !

புறப்படு தமிழா

அருந்தமிழின் இனம் காக்க
பெரும் தமிழர் பறைகொட்ட
புலிபோன்ற உன் எழுச்சியால்
"துளி" போன்ற தேசத்தவன்
கிலி கொண்டு அங்கம் காக்க
எலிபோல பதுங்கட்டும் .

முன்னவன் மாண்டிடினும்
பின்னவன் எழுந்தான் என
உளவு சேதி சொல்லக்கேட்டு
உள்ளாடைக்குள் வேர்க்கட்டும் .

பொங்கிவரும் கோபத்தால்
பல தாலி இழந்திடினும்
அத்தாலி அதுகோர்த்து
மேலெழும் தமிழ்க் கொடியோ
அசைவுகளால் அது பாடும்
தமிழனின் தன்மானப் பரணியை !

எழுதியவர் : திகம்பரன் (29-Jul-13, 7:59 pm)
பார்வை : 142

மேலே