+ரகசிய சிநேகிதி!+

ரகசிய சிநேகிதி!
ஆம், இவள் ரகசியமானவள்!
ஏனெனில்
இவளை யாருமே பார்த்ததில்லை!
நான் உட்பட!
என்ன விளையாட்டு என்கிறீர்களா!
உண்மை தாங்க!

தினம் என் கனவில் வருவாள்!
அவளை நான்
கண்டுகொள்வேன்!
அவள் என்னை
கண்டுகொண்டதேயில்லை!

அவள் நிழல் பார்த்து
நான் மடிகிறேன்!
அவள் என்
நிஜம்காண மறுக்கிறாள்!

ஆமாம்!
எப்போதும் எனக்கு
முன்னாலேதான் செல்கிறாள்!
நான் அவள்
முகம் கண்டதில்லை!

எவரேனும் அவளை சந்தித்தால்
கொஞ்சம் திரும்பிப்பார்க்க சொல்லுங்கள்!

பல யுகம் கடந்தாலும்
அவள் முகம் காணாமல்
விடமாட்டேன்!

அவளது முகம் காணவே இப்போது
பகலில்கூட நான் உறங்குகிறேன்!

எனக்கு உதவிசெய்ய
யாரேனும் நினைத்தால்
கொஞ்சம் என் கனவில் வந்து
அவளை திரும்பிப்பார்க்க
சொல்லுங்களேன்!

நம்பிக்கையுடன் உறங்கப்போகும்
உங்கள் நண்பனை
அவளைப் போல நீங்களும்
ஏமாற்றிவிட மாட்டீர்களே!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Jul-13, 12:58 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 163

மேலே