காதலியின் விழியோரம் ஈரம்

காதலியின் விழியோரம்
===கண்ணீரைக் கண்டு
ஆறுதலாய் அந்நேரம்
===அவளருகே சென்று
தேவதையே சொல்லிவிடு
===ஏனிந்த கண்ணீர்?
யார்கொடுத்த துன்பமிது
===வாளெடுத்து பிளப்பேன்!

என்று நான் கூற
===அவள் சந்தோஷமாய் மாற
சற்றுமுன் அடித்தகாற்று
===செய்தசதி இதுவே!
உடன்சென்று பிடிப்பாய்!
===சொன்னபடி நடப்பாய்!
என்று அவள் மொழிய
===சிரிப்பில் வந்தது வலியே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Jul-13, 6:20 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 418

சிறந்த நகைச்சுவைகள்

மேலே