வெற்றி

இடையூறுகள் பலநூறு -நமது
இமைகளை அழுத்தினாலும்
இடைவிடாமல் வெற்றியை நோக்கி
என்றும் செல் மானிடா !!
படையோடு நமது பாதையில் -பல
தோல்விகள் இருந்தாலும்
துணிவோடு அதனை எதிர்க்கொண்டால்
அதுவே வெற்றிக்கு ஏணிடா !!
பாதியில் திரும்பிய பாதச்சுவடுகள்
பலநூறு இருக்கலாம்
பயத்தில் உடனே திரும்பிட கூடாது
முயன்று நீ பார்க்கலாம் !!!
இன்றே பொழுதினில் உனது கடமைகளை
இனிதாய் முடித்து விடு
நன்றே விடியும் நாளை பொழுது
நம்பி நீ கண் உறங்கிடு !
பாலாஜி