துட்டங்காமுனும் உறுப்பு தானமும்

இறந்தபின் அனுபவிக்க
நார்த்துணி போர்வை,
பிணப் பணியாட்கள்,
அருங்கலக் குவளைகள்,
குவளை மேல் ஓவியங்கள்,
படுக்க ராட்சதக் கூம்பகம்,
கொஞ்சி விளையாட
இரண்டு சாபிறவிகள்,
எல்லாம் இருந்தும்
மூவாயிரம் ஆண்டுகளாய்
தேவைப்படவில்லை
துட்டங்காமுனுக்கு
அவனது உடல்.

நமக்கு மட்டும்
தேவைப்பட போகிறதா என்ன?

இறந்தபின் உறுப்புகளை
எழுதிக் கொடுக்க
வாழும்போது வாய்ப்பு.
பயன்படுத்திக் கொள்வோம்.

எழுதியவர் : ஆஷுதோஷ் (8-Aug-13, 8:00 am)
பார்வை : 71

மேலே