தாயின் தவிப்பு.....!
ஒன்பது மாதம் சுமந்து
குறைப் பிரசவமாய்ப் பிறந்து
நான்கு ஐந்து மாதங்களில் - அறுவை
சிகிட்சை! பலனின்றி மறைந்தாய்!
என் கருவினில் உதித்து
நெஞ்சினில் வாழ்ந்து
வாழ்வில் கலந்த நீ
எங்கே சென்றாயோ!
அன்பே! அபிராமியே!
உன்னைத் தேடுகிறேன்
தவிப்பினில் ஏங்குகிறேன்
துன்பத்தில் வாடுகிறேன்!