நம் இதயம் மட்டும்தான்
கைப்பிடி அளவு இதயம்,
கைத்தடி நழுவும் வரையும்,
நிரப்பிக்கொண்டேயிருக்கிறது,
எண்ணற்ற நினைவுகளை அதில்
கொஞ்சமே கொஞ்சந்தான்,
பெண்ணற்ற நினைவுகள்!!
அனைவருக்குமே,
ரகசிய சிநேகிதன்!!
அவரவர் இதயம் மட்டுந்தான்!
நம் நிலை கண்டு துடிப்பது
"துடித்துக்கொண்டேயிருப்பது
நம் இதயம் மட்டும்தான்............!!!!!!!!