ஏக்கம் (ஒரு பாமர அடிமை குழந்தையின் கண்ணீர் மடல் )

அழகா சீவி தல வாரி - அதுல ,
செவப்பு கலருல ரோஜா -வச்சு ,
அவ ரெட்ட ஜெட போட்டுக்கிட்டு ;
மொகத்துல பவுடர் பூசி பொட்டு -வச்சு ,
நெறைய சோப்பு போட்டு தோச்ச ,
பாவாட சட்ட போட்டுக்கிட்டு ;
கல்லுக்கு கருப்பு சூ -வ மாட்டிகிட்டு ;
கழுத்துல நீட்டாஒரு துணிய மாட்டிகிட்டு ;
பையுக்குள்ள நோட்டு புக்கு பேனா வச்சு ,
தண்ணி கேன பின்னால மாட்டிகிட்டு ;
வாசனையா இட்லி சாம்பார் கட்டிக்கிட்டு ;

அந்த பொன்னு ,
பள்ளிக்கூடம் போறாபோல ;
எனக்கு ஏன் இல்ல ?
நான் னா பாவம் பண்ணேன் ,
கச்சி வரைக்கும் அடியும் மிதியும் தானா ?
எனக்கும் ஆசை இல்லியா,
எங்களுக்கும் நல்ல சோறு கிடைக்காதா ?
நானும் பள்ளிக்கூடம் போவேனா ,
ம்.. ம்.. ம்..
கேள்வி கேட்டு கேட்டு எங்க முதுகு
கேள்விகுறி ஆனது தான் மிச்சம் !

எங்களுக்கும் நல்ல பொழுது விடியுமா !?....

காத்திருக்கிறேன் ! நானும் ,
பள்ளிக்கூடம் போவேன் என்று !.....

எழுதியவர் : ரா. பா.சிவகுமார் (14-Aug-13, 4:12 pm)
சேர்த்தது : Sivakumar Parthasarathy
பார்வை : 62

மேலே