சுதந்திரம்

வறுமை எனும் சிறுமை
தொலைக்கப்பட்டு..
வன்முறை எனும் ஆயுதம்
மழுக்கப்பட்டு..
லஞ்சம் எனும் பேய்
விரட்டப்பட்டு..
ஊழல் எனும் வியாதி
குணமாக்கப்பட்டு..
சாதி எனும் தீ
தணிக்கப்பட்டு..
மனிதனுக்கு சக மனிதனே
எதிரியாகும் எதிரியாக்கும்
எதையும் தொலைத்துவிட்டு,
முடங்கிக்கிடக்கும்
பாரதம் எனுமோர்
மாபெரும் வல்லரசை
உருவாக்க உறுதியெடுப்போருக்கு
உளம்கனிந்த
சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்..!

எழுதியவர் : பா ஆ ஞானசேகர் (14-Aug-13, 5:39 pm)
பார்வை : 109

மேலே