நானும் உலகை வெல்ல

தாலாட்டு பாட
தாய் ஒன்று எனக்கில்ல
ஆரீரோ சொல்ல
நான் ஆளில்லா பிள்ள

என் முழுப்பெயர் கேட்க
எனக்கு முகவரிதான் இல்ல
என்னை பெயர் சொல்லி கூப்பிட
எனக்கு உறவொன்றுமில்ல

ஊர் ஊரா அலைந்தும்
ஒரு உறையுளும் இல்ல
ஒரு வேலை சோற்றுக்கே
இங்கு வழி ஒன்றுமில்ல

நீயும் நானும் ஒன்றென்று
நானும் சொல்லவில்ல
நான் இப்படி பிறந்ததற்கு
யார நானும் குற்றம் சொல்ல

நீ சொத்தோட பிறந்தது
உனக்கு கடவுள் தந்த வரமுமில்ல
நான் அனாதரவாக பிறந்தது
எனக்கு கடவுள் தந்த சாபமுமில்ல

நாளை ஒரு காலம் வரும்
எனக்கும் வாழ்த்து சொல்ல
அது வரை காத்திருப்பேன்
நானும் உலகை வெல்ல

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (14-Aug-13, 5:51 pm)
Tanglish : naanum ulagai vella
பார்வை : 191

மேலே