பேருந்து பயணத்தில் ?

தினம் தினம் ஒரு போராட்டம்
வாழ்வில் வெற்றி பெற தினம்
ஒரு தோல்வியை கண்டு
அலுவலகம் செல்லும்
நேரம் இது

ஒரு வேலை உண்ண உணவு
இன்றி பசிதிடும் குடுபத்திற்கு
ஒரு வேலை உணவு அளித்திட
நேரம் பார்க்காது உழைக்கிறோம்

பெண்ணாக பிறந்தால் பாவமென
நான் என்ன வில்லை ஆனால் இன்று என்னுகின்றேன் பேருந்து பயணத்தில்

திருமணம் என்றால் பெண்ணிற்கு
ஒரு கனவுண்டு
ஆனால் பேருந்தில் பயணம் செய்யும்
பெண்ணிடம் ஏனோ இருபதில்லை
தினமும் செத்து செத்து பிழைக்கிறோம்

பேருந்து பயணத்தில் என் தந்தை
போன்றும் என் சகோதிரன்
போன்றும் என் அருகில் யாரேனும்
ஒருவன் இருப்பான் இருந்தும்
அவன் யாரென்று தெரியாது

கூட்ட நெரிசல் இல்லா பேருந்திலும்
பெண்ணிடம் தகாத செயலில்
ஈடு படுவான் அப்பொழுது அவனுக்கு
பெற்ற பெண்ணும் உடன் பிறந்த
சகோதரியும் உண்டு என்பதை மறந்து
விடுவான் பாவி

கொஞ்சம் தள்ளி நின்ற வேலையிலும்
தள்ளி நிற்க சொல்லும் போதும் மீண்டும்
என்னிடமே வந்து நிற்பான் சண்டாளன்

அவன் செய்யும் செயலை வெளிபடையாக கூறிவிட முடியாது அருகில் இருக்கும் திருமணம் ஆன தாய் போன்ற பெண்ணிடம் கூறினேன் எனக்கு
உதவுங்கள் என்று

அவளும் சொன்னால் அவன் என்னை அப்படி செய்யவில்லையே என்று,அப்பொழுது எனக்கு தெரியவில்லை அவள் அப்படி செய்ய வில்லையே என்று ஏட்கம் கொள்கிறாள?என்று

ஏன் இப்படி செய்கிறாய்?என்று கேட்க கூறினேன்
அவளும் பதில் அளித்தால் நான் கேட்டால் என்னை
கேட்க நீ யார்?என்று தேவய எனக்கு என்று

கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
இவளின் பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது என்று

நீங்களும் சிந்தியுங்கள் பெண்ணிற்கு பெண்ணும்
உதவ மனம் இல்லை தற்பொழுது இப்படி நடந்து கொள்ளும் மனிதனுக்கோ அறிவில்லை

வேண்டுகோள் : பேருந்து பயணம் மேற்கொள்ளும்
ஆண் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்
பேருந்தில் இடம் இல்லை என்றாலும்
பெண்களிடம் கொஞ்சம் நாகரிகமாக
நடந்து கொள்ளுங்கள்
தங்களுக்கும் உடன் பிறந்தவர்கள் உண்டு என்பதையும் மறந்து விடாதிர்கள் யாரேனும் அப்படி நடந்து கொண்டால் கண்டியுங்கள்

எழுதியவர் : ப்ரியாஅசோக் (16-Aug-13, 12:27 pm)
பார்வை : 111

மேலே