சாமிகள் வியாபாரம்

இயேசு, மாதா, மெக்கா, மெதினா,
முருகன், பிள்ளையார், காளி, அய்யனார்...
எல்லாச் சாமிகளும் குழுமியிருந்தனர்
மண்டையைப் பிளந்தெடுக்கும்
மதிய வெய்யிலில் அமர்ந்தபடி

‘நம்மை வாங்குகிற மனிதர்கள்
உதிரத்தை நமக்குப் பரிசளித்துவிட்டு
ஒன்று சேர்வார்கள் கல்லறைகளில்’
சாமிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்
மனிதர்களுக்குப் புரியாத தங்கள் மொழியில்

நட்டு வைத்த குடை நிழலொன்றில்
காவலென இருந்தான் ஒருவன்
கடந்து போகும் மனிதர்களைக் கூவியழைத்து
விலைசொல்லிக் கொண்டிருந்தான்
ஒவ்வொரு கடவுளுக்கும் ....

வைத்திருக்கும் கடவுள்கள் குறைந்து போனால்
பசித்திருக்கும் அவன் வயிறு நிரம்பக் கூடும்
ஆம். எத்தனை சந்தோசமாயிருக்கும்
எல்லாக் கடவுள்களும்
விலை போய்விட்டால்?

எழுதியவர் : முகவை என் இராஜா (18-Aug-13, 3:28 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 47

மேலே